'பயங்கரவாதிகளை பொறுப்பேற்கச் செய்வதில், சர்வதேச அமைப்புகள் தோல்வியடைந்துள்ளன'; ஜெய்சங்கர் அதிருப்தி..!
Jaishankar expresses dissatisfaction over failure of international organizations to hold terrorists accountable
டில்லியில், ஐக்கிய நாடுகளின் 80-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், இது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
'பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்கச் செய்வதில், சர்வதேச அமைப்புகள் தோல்வியடைந்து வருகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான ஐ.நா., ஆற்றும் எதிர்வினையை விட, ஐநா எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி மிச்சிறந்த உதாரணங்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் போன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் அமைப்பை, பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் வெளிப்படையாக பாதுகாக்கும் போது, ஐநாவின் பன்முகத்தன்மையின் நம்பகத்தன்மைக்கு என்ன செய்யும் என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, குற்றம் செய்தவர்களை பொறுப்பேற்கச் செய்வதில், சர்வதேச அமைப்புகள் தோல்வியடைந்து வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், உலகளாவிய திட்டம் என்ற பெயரில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதனை தூண்டி விட்டவர்களையும் சமமாக மதிப்பிட்டால் உலகம் எவ்வளவு சுயநயலமானதாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாதிகள் என தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டவர்களை தடையில் இருந்து பாதுகாக்கும் போது, அதற்கு காரணமானவர்களின் நேர்மையை பற்றி என்ன சொல்கிறது என்று அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பது வெறும் வாய் வார்த்தையாக மாறிவிட்டால், வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தின் இக்கட்டான நிலை இன்னும் பிரச்னையாகிவிடும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பேசியுள்ளார்.
English Summary
Jaishankar expresses dissatisfaction over failure of international organizations to hold terrorists accountable