தன் கால்களை ஆகாயத்திலிருந்து இறக்காத உதவாநிதிக்கு... அதிமுக பதிலடி!
ADMK DMK Udhay
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிமுக சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில்,
● நெல் செடியில் வருமா? கொடியில் வருமா?
●நெல் விவசாயம் எத்தனை நாட்கள் நடக்கும்?
●முப்போகம் என்றால் என்ன?
●நெல் கொள்முதல் என்றால் என்ன? அது எப்படி நடக்கும்?
● நெல் எதற்கு பயன்படுத்துவார்கள்?
இதற்கெல்லாம் யாரும் எழுதிக் கொடுக்காமல், சுய அறிவைப் பயன்படுத்தி உதயநிதியால் பதில் சொல்ல முடியுமா?
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத உதயநிதிக்கு,
தன் கால்களை ஒருபோதும் ஆகாயத்தில் இருந்து இறக்காத இந்த உதவாநிதிக்கு,
மண்ணில் கால் வைத்து, ஏர் கலப்பை பிடித்து உழுத விவசாயியான எங்கள் பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கருத்துகளுக்கு பதில் கொடுக்க என்ன அருகதை இருக்கிறது?
விவசாய நிலத்தில் சிமெண்ட் ரோடு போட்டு ஷூ காலோடு நின்று போட்டோஷூட் எடுத்தவரின் மகன் தானே நீங்கள்?
ஒன்றுமே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே பேப்பரைப் பார்த்து கக்குவதை விடுத்து, பகுத்து-அறிவு என்பது கொஞ்சமாவது உங்களுக்கு இருந்தால், அதைப் பயன்படுத்தி, உண்மையைத் தெரிந்துகொண்டு, இனியாவது விவசாயிகளைக் காப்பதற்கான வழியைப் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளது.