கில் ரீமேக் படத்தில் துருவ் விக்ரம்...! ஆனால் 3 ஹீரோயின்கள்...! யார் யார் தெரியுமா?
Dhruv Vikram Kill remake But 3 heroines Do you know who are who
கடந்த ஆண்டு இயக்குனர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் 'கில்'. பிரபல பாலிவுட் இயக்குனர் 'கரண் ஜோகர்' தயாரித்த இந்த படத்தில் ராகவ் ஜுயல், தன்யா,லக்ஷயா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஆக்சன் திரில்லர் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருந்தது.இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சமயத்தில், இப்படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை இயக்குனர் 'ரமேஷ் வர்மா' அதிகாரபூர்வமாக வாங்கியுள்ளார்.
இந்த 'கில்' படத்தின் ' தமிழ் ரீமேக்கில் நடிக்க துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் உறியடி விஜயகுமார் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில்,துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க 3 கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில், கேதிகா சர்மா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் என 3 கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த 'கில்' படத்தில் ஒரு கதாநாயகி தான். இருப்பினும், இதன் ரீமேக்கில் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ள நிலையில்,கதையில் திருத்தம் செய்திருப்பார்கள் என தெரிகிறது. மேலும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Dhruv Vikram Kill remake But 3 heroines Do you know who are who