''ராகுல் தான் செய்யும் செயல்களில் நேர்மையில்லாதவர்: ரேவந்த் ரெட்டியின் மூலமாக, சந்திரபாபு நாயுடுவுடன் ரகசிய பேச்சுவார்த்தை'': ஜெகன்மோகன் குற்றசாட்டு..!
Jagan Mohan Reddy alleges that Chandrababu Naidu has a secret alliance with Rahul
காங்கிரஸ் எம்பி ராகுலுடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து பேசி வருவதாகவும், இதன் காரணமாகவே ஆந்திராவில் நடந்த ஓட்டு திருட்டு குறித்து ராகுல் அவருடன் பேசவில்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இது குறித்து பேசியுள்ளார். அதாவது, ஆந்திர சட்டசபை தேர்தலில் போது, மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை விட, எண்ணப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது என்றும், டில்லி, மஹராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நடந்த தேர்தல்களில் ஓட்டு திருட்டு நடந்ததாகக் ராகுல்காந்தி குற்றம் சுமத்தி வருகிறார்.
ஆனால், ஆந்திராவைப் பற்றி மட்டும் ஏன் பேசுவதில்லை என்றும், ஏனெனில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மூலமாக, ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், அண்மையில் டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஆம்ஆத்மி தோல்வியை சந்தித்தது. ஆனால், அதைப்பற்றி ஏன் ராகுல் பேசவில்லை என்றும், ராகுல் தான் செய்யும் செயல்களில் நேர்மையில்லாதவர் என்றும், அவரைப் பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
Jagan Mohan Reddy alleges that Chandrababu Naidu has a secret alliance with Rahul