நடத்தையில் சந்தேகம்.. கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி !
Doubt in conduct Wife pours boiling oil on husband in rage
கர்நாடக மாநிலம் அருகே சந்தேகப்பட்டு கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் வசித்து வருபவர் அனுமந்தபாட்டீல். இவரது மனைவி வைஷாலி .இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அனுமந்தபாட்டீலின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வேறொரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கருதி வைஷாலி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுபோல் சம்பவத்தன்று மதியம் வைஷாலி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார்.
அந்த சமயத்திலும் வைஷாலிக்கும், அனுமந்த பாட்டீலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்று கூறபடுகிறது . அப்போது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வைஷாலி கூறியதற்கு அனுமந்தபாட்டீல் மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த வைஷாலி சமையல் செய்ய அடுப்பில் வானெலியில் வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை கணவர் என்று கூட பாராமல் அனுமந்தபாட்டீல் மீது ஊற்றினார். இதில் அவரது முகம், மார்பு, என பலத்த தீக்காயம் ஏற்பட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் வைஷாலி மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மீது வைஷாலி கொதிக்கும் எண்ணெயை ஊற்றியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Doubt in conduct Wife pours boiling oil on husband in rage