காவல்துறை அதிகாரிகளை அரிவாளால் தாக்க முயன்ற வாலிபர்கள்..நெல்லையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


அரிவாள்களுடன் நின்று எதற்காக பொதுமக்களை அச்சுறுத்துகிறீர்கள்?’’  என்று வாலிபர்களிடம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, 

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு கருணைராஜ், போலீஸ்காரர் குருமகேஷ் ஆகியோர் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி பொன்னாக்குடி அருகில் சென்றனர். அங்கு சாலையோரமாக மோட்டார் சைக்கிளின் அருகில் நின்ற 2 வாலிபர்கள் கைகளில் பெரிய அரிவாள்களை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் போலீசாரை நோக்கி, ‘‘எங்கே சென்றாலும் தேடி வருகிறீர்களே?’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு போலீசார், ‘‘அரிவாள்களுடன் நின்று எதற்காக பொதுமக்களை அச்சுறுத்துகிறீர்கள்?’’ என்று வாலிபர்களிடம் தட்டிக்கேட்டதாக கூறபடுகிறது . அப்போது உடனே வாலிபர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் வாலிபர்களில் ஒருவர் திடீரென்று அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனை வெட்ட முயன்றார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் விலகியதால் உயிர் தப்பினார்.

தொடர்ந்து மற்றொரு வாலிபரும் போலீஸ் ஏட்டு கருணைராஜை அரிவாளால் வெட்ட முயன்றபோது  ஏட்டு விலகியதால் தப்பினார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றது நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்த வான் மகேஷ்), உத்தமபாண்டியன்குளத்தைச் சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teenagers tried to attack police officers with a machete Sensation in Nellai


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->