ஒரேயொரு டிவிட்., மூன்று மாநில முதல்வர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட ராகுல்காந்தி.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் கருத்துக்கு, அசாம், திரிபுரா, மணிப்பூர் மாநில முதலமைச்சர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா என்று டிவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்த பதிவில், வட கிழக்கு மாநிலங்களை குறிப்பிடாமல் பதிவிட்டு இருந்தார். இதற்க்கு வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்களை ராகுல்காந்தி மறந்து விட்டாரா? என்று வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும்.,
குஜராத் முதல் வெஸ்ட் பெங்கால் வரையும்., பண்பாடுகளின் ஒன்றியம் ஆன இந்தியா அழகானது
" என்று ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்க்கு பதிலளித்துள்ள திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், "வடகிழக்கு மாநிலங்களை ராகுல்காந்தி மறந்து விட்டது ஏன்? வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் ஒரு பகுதிதான்" என்று ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

அசாம் மாநில முதலமைச்சர், "வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவில் உள்ளது" ராகுல்காந்திக்கு பதில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மணிப்பூர் மாநில முதலமைச்சர் தெரிவிக்கையில், "தங்கள் இருப்பை ஏற்காத காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் வட கிழக்கு மாநிலங்களில் எப்படி தேர்தலில் வாக்கு  கேட்பார்கள்? என்பதை பார்க்கத்தான் போகிறோம். நாட்டை பிரித்து பார்ப்பது யார்?" என்று ராகுல்காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ASAM CM REPLY TO RAHULGANDHI TWEET


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->