ரூ.5000 கோடி ஊழல்: தமிழக மக்களின் வயிற்றில் அடித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? நீங்கள் யாருக்கு அப்பா? அறப்போர் இயக்கம் கேள்வி! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் மன்னிக்கவும் கிறிஸ்டி சப்ளைஸ் கார்ப்பரேஷனில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ 5000 கோடி சுருட்டிய ரேஷன் ஊழல். ஊழல்வாதிகளை பாதுகாத்து மக்களை எட்டி உதைக்கும் அப்பா !

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே கடந்த அதிமுக ஆட்சியில் 2028 கோடி ரூபாய் அளவிற்கு பருப்பு,சர்க்கரை பாமாயில் ஊழலை கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்கள் செய்தது. மேலும் ரேஷன் பொருள் போக்குவரத்து ஒப்பந்தத்திலும் 2000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்யக்கூடிய டெண்டரை அதிமுக அரசு அவர்களிடம் கொடுத்தது.

அறப்போர் கொடுத்த இந்த ஊழல் புகார்கள் மீது இதுவரை நீங்கள் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை.கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்களை கருப்பு பட்டியலிலும் சேர்க்கவில்லை. மாறாக முருகர் பெயரால் உள்ள கிறிஸ்டி குமாரசாமி நிறுவனங்களான கார்த்திகேயா என்டர்பிரைசஸ்,ஓம் முருகா என்டர்பிரைசஸ் மற்றும் கந்தசாமி & கோ நிறுவனங்களுக்கு எந்த அனுபவமும் இல்லாவிட்டாலும் டெண்டர் செட்டிங் செய்து கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடிய வகையில் உங்கள் அரசு மோசடி செய்து டெண்டர் வழங்கியுள்ளது. உங்கள் அமைச்சர் சக்கரபாணி இதன் மீது விசாரணை கூட நடத்தாமல் கிறிஸ்டி நிறுவன ஊழலுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இப்பொழுது நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால் கூட 500 கோடி ரூபாய் இழப்பை நாம் தடுக்க முடியும். ரேஷன் பொருள் வாங்கும் மக்களின் வயிற்றில் அடித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?? நீங்கள் யாருக்கு அப்பா??  தமிழ்நாட்டு மக்களுக்கு அப்பாவாக இல்லாமல் கிறிஸ்டின் நிறுவனங்களின் ஊழலை காக்கும் ஊழல்வாதிகளின் அப்பாவாக இருப்பதற்கு நீங்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.

பகல் கொள்ளை அடிக்கும் உங்கள் அரசிற்கு எதற்கு இந்த வேடம்?? தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஐ தமிழ்நாடு கிறிஸ்டி சப்ளை கார்ப்பரேஷன் என்று  பெயரை மாற்றி விடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arapor Iyakkam Condemn to DMK Govt MK Stalin Scam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->