சுப்ரீம் கோர்ட் நீதிபதியிடம் அமர்வுக்கு வந்த மேல் முறையீடு!
Appeal filed before Supreme Court judge
சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அமலில் இருக்கும் பழைய திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெற அனுமதித்தை தொடர்ந்து முதலைமைச்சரின் பெயரை பயன்படுத்த தற்போது தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு தொடங்கும் திட்டங்களில், முன்னாள் முதலமைச்சர் படத்தையோ, ஆளுங்கட்சியின் கொள்கை சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.இதில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மற்றும் முகுல் ரோத்தஹி வழக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.இந்த வழக்கை நாளை மறுநாள் அதாவது புதன்கிழமை மேல்முறையீட்டு குறித்து விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
English Summary
Appeal filed before Supreme Court judge