சக கலைஞனின் மறைவிற்கு கூட வரமுடியாத அளவிற்கு மாபெரும் நடிகர்களின் மமதை தங்களது கண்களை மறைக்கிறதா? - ஜெயக்குமார்!
ADMK Jaykumar Condemn to Tamil Actor
பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும் , நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப் காலமானார்.
எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்டநடிகர் மதன் பாப் தனது வேடிக்கையான முகபாவனைகள், சிரிப்பு, நீண்டுகொண்டிருக்கும் கண் இமைகளுக்குப் பெயர் பெற்றவர்.
இசையமைப்பாளராகத் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதன்பாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. மதன் பாபின் உடலுக்கு அஞ்சலிக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தன்னுடைய சிரிப்பால் பிறரை சிரிக்க வைத்த குணச்சித்திர நடிகர் மதன்பாபு அவர்களின் மறைவு தமிழ் கலைத்துறைக்கான பேரிழப்பு!
தமிழ் சினிமாவில் சிலர் உச்சபட்ச நடிகர்களாக உருவாகுவதற்கு மதன்பாபு போன்றவர்களின் உழைப்பும் ஒரு வகையில் காரணம்!
சக கலைஞனின் மறைவிற்கு கூட வரமுடியாத அளவிற்கு மாபெரும் நடிகர்களின் மமதை தங்களது கண்களை மறைக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
ADMK Jaykumar Condemn to Tamil Actor