''சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்வி": கமல்ஹாசன் பேச்சு..! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அங்கு  படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா, சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் கலந்துகொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: டீஸர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என எவ்வளவோ விழாக்கள் நடத்துகிறோம். அதிலெல்லாம் கிடைக்காத சந்தோசம் எனக்கு இதில் கிடைக்கிறது துன்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள் என்று மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார். மேலும் ''நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே எனக்கே சந்தேகம் வந்திருச்சு. அதனாலதான் இது (டிஷ்யூ பேப்பர்) கொண்டு வந்தேன். பரவால நான் நல்ல நடிகன்தான் அழாம பேசிட்டேன்''. என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Haasan says education is the only weapon that can break the chains of slavery and dictatorship


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->