நெல்லையில் நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிச்சாமி இடையே ஆலோசனை மற்றும் சிறப்பு விருந்துபசாரம்..!
Consultation and special banquet between Nayinar Nagendran and Edappadi Palaniswami in Nellai
அதிமுக பொதுச் செயலாளர் நெல்லை சென்றுள்ளார். அப்போது அவர் நயினார் நாகேந்திரனை, அவரது வீட்டில் வைத்து தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக -பாஜ இடையே கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள நெருடல் மற்றும் முரண்பாடுகளை களையும் விதமாக , 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் இபிஎஸ்-பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவரை தன் வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைக்க முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் செய்துள்ளார். இதனை இபிஎஸ் ஏற்றுக்கொண்டார். அத்துடன், நேற்று முன்தினம் கோவில்பட்டியில் நடந்த பிரசார பயணத்திலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார்.
-jnkh3.png)
இந்நிலையில், இன்று இரவு இபிஎஸ் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு மாடியில் உள்ள தனியறையில் இருவரும் தனியே ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பு விருந்து கொடுத்துள்ளார். இந்த விருதில் பாஜக முக்கிய தலைவர்கள் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் முருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
English Summary
Consultation and special banquet between Nayinar Nagendran and Edappadi Palaniswami in Nellai