முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முதல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது. 2-ம் செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

பொறியியல் கல்லூரிகளில்  முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆண்டு தோறும் நடைபெறும்.

அந்தவகையில் இந்த ஆண்டு தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில்  90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதனை தொடர்ந்து அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர்.இந்தநிலையில்  இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது.இதையடுத்து  பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது.

இந்தநிலையில் தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், பி.இ., பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இவர்களுக்கான முதலாம் செமஸ்டர் வகுப்புகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி முடிவடைகிறது.

முதல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது. 2-ம் செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Announcement of the start date for first-year classes


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->