வெள்ளை மாளிகையின் பெண் பத்திரிகை செயலாளரை எல்லை மீறி வர்ணித்து சர்ச்சையில் சிக்கியுள்ள டிரம்ப்: அருவறுப்பானவை என்று நெட்டிசன்கள் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து வர்ணித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  27 வயதான கரோலின் லீவிட், வெள்ளை மாளிகையின் டிரம்பின் ஐந்தாவது பத்திரிகையாளர் செயலாளராகவும், அவரது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல்வராகவும் உள்ளார்.

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய கரோலின் லீவிட், ஆறு மாதங்களுக்கு முன்பு  அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, ஒரு சமாதான ஒப்பந்தம் மற்றும் போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்துள்ளார். இதாங்க அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக டிரம்பிடம்  ஒரு பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது: கரோலின் லீவிட் மிகவும் பிரபலமானவராக மாறிவிட்டார் என்றும், .அவரது அந்த முகமும், அந்த மூளையும், அந்த உதடுகளும். அவை அசையும் விதமும் ஒரு இயந்திர துப்பாக்கி போல் செயல்படுகின்றன என்று வர்ணித்தார். அத்துடன், கரோலின் லீவிட் மிகச்சிறந்த பெண்மணி. அவரை விட மிகச்சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது என்று கூறினார்.

ட்ரம்பின் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி குறித்து டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது அருவறுப்பானவை என்று கூறிவருகின்றனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல கருத்துக்களை பதிவிட்டு ட்ரம்பின் செயலை கண்டித்தும் வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump faces controversy over his description of the White House female press secretary


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->