வெளிமாநிலத்தவரை சேர்க்க முடியாது.. வைகோ ஆவேசம்! - Seithipunal
Seithipunal


'வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை முறியடிப்போம் என்று  வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-கடந்த ஜூலை 26-ந்தேதி பீகார் மாநிலத்தில் நடந்து வந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி  நிறைவு பெற்றதில்  65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிட்டது.

அதில் பெயர்கள் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க செப்டம்பர் மாதம் 1-ந்தேதி வரை ஒரு மாத காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக பீகாரில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் மாறி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எந்த மாநிலத்தில் எந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார்களோ?, 

 பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வேலைக்காக வந்து தங்கி இருக்கிறார்கள். 
தமிழகத்தில் விரைவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்க உள்ளது. அப்போது தமிழகத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் தங்களது பெயர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிப்பார்கள். அவர்கள் மனு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவார்கள்.

இவ்வாறு நடந்தால் தமிழக வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழகத்தில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழகத்தில் தற்போது உள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த சுமார் 75 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகலாம்.

. தமிழ்நாட்டை குறி வைத்திருக்கும் பா.ஜ.க., வாக்காளர் பட்டியலில் இத்தகைய ஏற்பாடுகளை செய்து தேர்தலில் ஆதாயம் அடைய முயற்சிப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது. தலைமைத் தேர்தல் ஆணையம் வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is not possible to include foreigners Vaiko is furious


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->