மீண்டும் சென்னையில் வரவிருக்கும் டபுள் டக்கர் பஸ்...! வசதிகள் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள்...?
Double decker buses coming to Chennai again Transport Corporation officials on facilities
கடந்த 1970-களில் சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்தது.சென்னையில் சுமார் 10 ஆண்டுகள் இந்த பேருந்துகள் ஓடின. அதன்பிறகு சில காரணங்கள் கடந்த 1980-களில் இரட்டை அடுக்கு பேருந்து நிறுத்தப்பட்டன. அதன் பிறகு 1997-ம் ஆண்டில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

சென்னையில் ஓடத் தொடங்கி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அவை பயணிகளை ஏற்றிச் சென்றன. கடைசியாக உயர்நீதிமன்றம் - தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன.அதன்பிறகு இதுவரை சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னையில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.இந்த முறை வழக்கமான பயணிகள் பயணத்துக்கும், சுற்றுலாப் பயணத்துக்கும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
போக்குவரத்துக் கழக அதிகாரிகள்:
இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்ததாவது,"சென்னை நகரச் சாலைகளில் ஒரு காலத்தில் பயணிகள் மிகவும் விரும்பிப் பயணம் செய்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் இயக்கப்பட இருக்கிறது.இந்த முறை அவை நாள்தோறும் பயணத்துக்கு மட்டுமல்லாமல், சென்னை நகரச் சுற்றுலாவுக்கும் பயன்படுத்தப்படஇருக்கிறது.
சுற்றுலா செல்வதற்கு பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த பேருந்துகள் வார நாட்களில் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இயக்கப்படம். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை நகரச் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்படம் .
இந்த பேருந்துகள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்படும். வழித்தடத் திட்டமிடல் மற்றும் கட்டண நிர்ணயம் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கான டெண்டர் விரைவில் வர இருக்கிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
இரட்டை அடுக்கு மின்சாரப் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. சாதாரண மின்சாரப் பேருந்துகளைவிட 1.5 மடங்கு அதிகமாக, கிட்டத்தட்ட 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. சென்னையில் மாநகரப் பேருந்துகளின் கூட்ட நெரிசல் காணப்படும் நிலையில், அதிக தேவை இருக்கும் வழித்தடங்களில் இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும்" என்று தெரிவித்தார்.
English Summary
Double decker buses coming to Chennai again Transport Corporation officials on facilities