சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு 50 லட்சம் நன்கொடை - இயக்குநர் த.செ.ஞானவேல்.!!
50 lakhs donates to akaram foundation
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா "அகரம் தொண்டு நிறுவனம்" என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தத் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர். மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார். இந்த நிலையில், சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு இயக்குநர் த.செ.ஞானவேல் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
English Summary
50 lakhs donates to akaram foundation