பிலிப்பைன்ஸை புரட்டிய சூறாவளி: 26 பேர் பலி; பொதுமக்கள் பெரும் அவதி..!
26 people killed in typhoon that hit the Philippines
பிலிப்பைன்சில் கனமழை கொட்டி தெரிகிறது. இதனால் அங்கு வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் சராசரியாக ஆண்டுதோறும் 20க்கும் மேற்பட்ட சூறாவளிகள் மற்றும் புயல்களால் பாதிக்கப்படுகிறது. அத்துடன், அங்கு அடிக்கடி நிலஅதிர்வும் நிகழ்கிறது.
இந் நிலையில் அந்நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி சூறாவளி தாக்கியுள்ளது. சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமான கார்கள், டூ வீலர்கள் முற்றிலும் மூழ்கியுள்ளன.

அங்கு தெற்கு லெயிடின் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், செபு மாகாணமும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்து இருப்பதால் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் உதவிகளை மேற்கொள்ள மீட்புக்குழுவினர் சென்றுள்ளனர்.
English Summary
26 people killed in typhoon that hit the Philippines