'பொருளாதார பலத்தால் இந்தியா சொந்தக்காலில் நிற்கிறது; விரைவில் 03-வது இடத்திற்கு வரப்போகிறது': மத்திய நிதியமைச்சர்..! - Seithipunal
Seithipunal


டில்லி பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, '' பொருளாதாரம் காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது,'' என கூறியுள்ளார்.

அத்துடன், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் இந்தியா வேகமாக முன்னேறும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்றும்,  இந்தியா அதன் மக்கள் தொகை மற்றும் அதன் புவியியல் ரீதியில் அமைப்பக்காக முக்கியத்துவம் பெறுகிறது என்றும் பேசியுள்ளார், ஆனால், இந்தியா ஒன்றாக இருக்கிறதாகவும், பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவை மையப்படுத்திய கொள்கை மற்றும் கொள்கை திட்டமிடலையும் நாம் அதிகரிக்க வேண்டும் என்றும், வளரும் பொருளாதாரத்துக்கான மாடலை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தொடரந்து, வறுமையில் இருந்து 2.5 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்,  விரைவில் இந்தியா உலகின் மிகப்பெரிய 03 வது பொருளாதார நாடாக மாறும் என்றும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த 2014-இல் உலகின் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா இன்று 05-வது இடத்தில் இருக்கிறது. அடுத்து 04-வது இடத்துக்கும், விரைவில் 03-வது இடத்துக்கும் வரப்போகிறது என்றும், இது தான் இந்தியாவை எழுச்சி பெறச் செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். நாம் அனைவரும் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும், அத்துடன், நமது பொருளாதாரம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்துக்கு பங்களிப்பு அளிக்கும் இந்தியர்கள் என்ற முறையில் நமது முயற்சிகள் மூலம் நமது இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் அவர் மேலும் கூறுகையில், நமது பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என சொல்பவர்களை நம்பி நாம் அடிபணியக்கூடாது என்றும் அறிவித்துள்ளார். மேலும், 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை எப்படி இறந்த பொருளாதாரம் எனச் சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளியில் இருந்து வருபவர்கள் நம்மை கிண்டல் செய்வார்கள். ஆனால், நாட்டிற்குள் இருக்கும் நாம் எப்போதும் நமது சொந்த முயற்சிகளையும், சாதனைகளையும் ஒரு போதும் குறை சொல்லக்கூடாது என்றும் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Finance Minister says India stands on its own two feet due to economic strength


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->