ராம்சரணுடன் படம் செய்யாததற்கு இதுதான் காரணம்...! - கௌதம் - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் 'கெளதம்', 'ஜெர்சி' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் ராம்சரண் படத்தினை இயக்குவதாக இருக்கிறார். ஆனால், அந்தப் படம் சில சொல்லமுடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.

அதன் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா வைத்து 'கிங்டம்' படத்தினை உருவாக்கியுள்ளார்.அண்மை நிகழ்ச்சியின் பேட்டியொன்றில், தற்போது ராம்சரண் படத்தை இயக்காதது ஏன்? என்று கெளதம் தெரிவித்திருக்கிறார்.

கெளதம்:

அதில் கெளதம் குறிப்பிட்டதாவது, "ராம்சரணிடம் கதையொன்றை தெரிவித்தேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதையினை முழுமையான திரைக்கதையாக எழுதினேன். அதன் பின் அது ராம்சரணுக்கு பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்தேன். ராம்சரண் போன்ற ஒரு நட்சத்திரத்தை இயக்குவது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு.

எனவே, ஏதோ ஒரு படத்தினை அவரை வைத்து இயக்க விரும்பவில்லை. இதை அவரிடமே தெரிவித்தேன். பின்பு இருவரும் சரியான கதை அமையும் போது இணைந்து பணிபுரிய முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கெளதம் இயக்கத்தில் 'விஜய் தேவரகொண்டா' நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கிங்டம்'. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் 3 நாட்களில் ரூ.67 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

reason why I didnt do film with Ram Charan Gautham


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->