புதிய சுவையில் புடலங்காய் தயிர் பச்சடி.!!
how to make pudalangai thayir pachadi
நாம் இதுவரைக்கும் வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட் இதை வைத்துதான் தயிர் பச்சடி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், முதன் முறையாக புடலங்காயை வைத்து தயிர் பச்சடி செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
புடலங்காய், மஞ்சள் தூள், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், தயிர், எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கருவேப்பிலை, உப்பு.
செய்முறை:-
முதலில் புடலங்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு நாம் வேக வைத்திருக்கும் புடலங்காயை சேர்த்து கலந்து விட வேண்டும்.
தொடர்ந்து வானலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய் இவற்றை போட்டு நன்றாக பொரிய விட்டு அடுப்பில் இருந்து இறக்கி அதில் பெருங்காயத் தூளையும் கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு தயார் செய்து வைத்திருக்கும் புடலங்காயில் ஊற்றி கலந்து விட வேண்டும். கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தலையை மேலாக தூவி விட்டால் புடலங்காய் தயிர் பச்சடி தயார்.
English Summary
how to make pudalangai thayir pachadi