ஓலைச் சுவடிகளை பாதுகாக்க வெறும் 1 கோடியே 64 லட்சம் ரூபாய் மட்டும் தானா..? மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி..!
Why was only Rs 1 crore 64 lakh allocated for the preservation of the palm fronds asked Kanimozhi MP in the Lok Sabha
தமிழ்நாட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட பழமையான ஓலைச் சுவடிகளின் பாதுகாப்பு குறித்து மக்களவையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். அதிலும் குறிப்பாக ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தமிழ்நாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளில் 1 கோடியே 64 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ள ஏன்? எனவும், ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், அண்ட் திட்டத்தை மேற்கொள்ள முன்மொழிந்திருக்கிறதா..? அதன் விவரங்கள் குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஏற்கனவே இருந்த தேசிய ஓலைச் சுவடிகள் இயக்கம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஞானபாரதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து எத்தனை கையெழுத்து ஓலைச் சுவடிகள் கையகப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் கேட்டுள்ளார்.

இவ்வாறான பழமையான கையெழுத்து பிரதிகளான ஓலைச் சுவடிகள் பல தனிநபர்களிடம் இருக்கும் நிலையில் அவற்றை கையகப்படுத்த கொள்கை மற்றும் சட்ட தெளிவு இல்லாததால் இன்னமும் அவை தனி நபர்களிடமே இருக்கின்றன. அவர்களின் தயக்கத்தைப் போக்கி அந்த ஓலைச் சுவடிகளை சேகரிக்க அரசு திட்டம் வைத்திருக்கிறதா..? என்றும் வினாவியுள்ளார்.
மேலும், தேசிய ஓலைச்சுவடி இயக்கத்தின் கீழ் குறிப்பாக தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்தும், இந்த இயக்கத்தின் பிராந்திய மையங்கள் அல்லது டிஜிட்டல் மயமாக்கல் மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன என்பது பற்றியும் விளக்குமாறு என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Why was only Rs 1 crore 64 lakh allocated for the preservation of the palm fronds asked Kanimozhi MP in the Lok Sabha