இந்திய கிரிக்கெட் அணியிடம் மன்னிப்பு கோரியுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர்...? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து எதிரான 05 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய சிறப்பாக சமன் செய்துள்ளது. இன்று ஆவலில் நடந்து முடிந்த போட்டியில் இந்திய அணியின் அபார பந்து வீச்சு மற்றும்வீரர்களின் உழைப்பு சினாமாவை மிஞ்சிய திர்ல்லராக இருந்தது. இந்நிலையில்,  நமது இந்திய அணி ஹீரோக்களுக்கு சபாஷ் என ஓவல் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு கூறியதோடு, இந்திய கிரிக்கெட் அணியிடம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றிக்காக இந்திய கிரிக்கெட் அணி ஓவல் மைதானத்தில் படைத்துள்ளது. இதனை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டியுள்ளதோடு, இந்த வெற்றியில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்த போட்டியின் போது இந்திய அணியின் மன உறுதி, உறுதிப்பாடு மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''என்ன ஒரு வெற்றி..! இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபார வெற்றி பெற்றதில் இந்தியாவுக்கு மிகவும் உற்சாகமாகவும், பரவசமாகவும் இருக்கிறது. காட்டப்பட்ட மன உறுதி, உறுதிப்பாடு மற்றும் ஆர்வம் வெறுமனே நம்ப முடியாதவை. இந்த அணி சிறப்பு வாய்ந்தது.''என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதான ஒரு பதிவில் அவர் இந்திய அணி குறித்து முன்னதாக சந்தேகம் தெரிவித்ததற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது, நேற்று முடிவு குறித்து நான் ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தியதற்கு வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளதோடு, நம் ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை மிஸ் செய்வதாகவும், ஓவல் டெஸ்டின் போது இன்னும் அதிகமாக மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MP Shashi Tharoor apologizes to Indian cricket team


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->