'பருத்திவீரனில் சித்தப்பாவாக நடிக்காததற்கு காரணம்': அமீரின் கேள்விக்கு பதிலளித்த பசுபதி..! - Seithipunal
Seithipunal


மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா ஆகியோர் நடிப்பில்வெளியான படம் `பைசன்'. இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பசுபதி கலந்துகொண்டார். அப்போது  இப்படத்தின் முந்தைய நிகழ்வு ஒன்றில் அமீர் கேட்ட கேள்விக்கு இன்று பதில் கூறியுள்ளார்.

பருத்திவீரன் படத்தில் சரவணன் நடித்த சித்தப்பு கதாபாத்திரத்தில் பசுபதிதான் நடிக்க வேண்டும் என நினைத்து வைத்திருந்தேன். ஆனால், அவரை என்னால் அப்போது நடிக்க வைக்க முடியவில்லை என அமீர் கூறியிருந்தார். இந்த விஷயத்தை நினைவுபடுத்திய பசுபதி "அமீர் சாருடன் நான் நிறைய பேசியதில்லை. படத்திலும் எனக்கும் அவருக்குமான காட்சிகள் இல்லை, எனவே அங்கும் பேச முடியவில்லை. ஆனால், அவருக்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என நினைப்பேன். ஆனால் விட்டுவிடுவேன். இப்போது அதை சொல்ல வேண்டும் போல தோன்றுகிறது.

அவரது பருத்திவீரன் படத்தில் என்னை நடிக்க (சித்தப்பு பாத்திரத்தில்) அணுகியதையும், அது நாடக்காமல் போனதையும் ஒரு மேடையில் கூறியிருந்தார். அவர்கள் என்னை அணுகியது உண்மை தான். ஆனால், அவர்கள் என்னை கேட்ட நாள், `வெயில்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்தேன்.

ஒன்றரை மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு. இடையில் ஏதாவது கேப் கிடைத்தால் பார்க்கிறேன் என சொல்லி இருந்தேன். இல்லை அடுத்த வாரம் நீங்கள் படப்பிடிப்பு வர வேண்டும், இரண்டு மாதம் ஷூட் இருக்கிறது என்றார்கள். எனவே என்னால் முடியாது என கூறினேன். இதுதான் உண்மை. என்று பசுபதி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pasupathi responds to the reason for not playing Siddappa in Paruthiveeran


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->