9 வருட காதல்… 90 நாட்களில் கொலை... ! - மஃப்லர் மூலம் தொங்கவிட்டு தற்கொலை போல நடித்த அதிர்ச்சி சம்பவம்!
9 years love murdered 90 days shocking incident where victim hanged muffler to make suicide
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் யாதவ் (33), இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஜோதி என்ற பெண்ணை காதலித்து வந்த அவர், கடந்த நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்வில் அமைதி நீடிக்கவில்லை. பணச் சிக்கல்கள் காரணமாக ஜோதி மற்றும் ஜிதேந்திரனுக்கு இடையே அடிக்கடி தகராறு வெடித்ததாக கூறப்படுகிறது.ஜனவரி 26ஆம் தேதி ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது, ஜோதி தனது பெற்றோர் மற்றும் சகோதரரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அவர்கள் ஜிதேந்திரனை பிடித்து கட்டுப்படுத்திய நிலையில், ஆவேசமடைந்த ஜோதி அவரது கழுத்தை நெரித்து கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவத்தை தற்கொலையாக காட்டும் நோக்கில், ஒரு மஃப்லரைப் பயன்படுத்தி அவரது உடலை ஜன்னல் கம்பியில் கட்டி தொங்கவிட்டு நாடகமாடியுள்ளனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் ‘தற்கொலை செய்து கொண்டார்’ என கூறி ஏமாற்ற முயன்றனர்.இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
அதில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியதையடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜோதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவருடன் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஜோதியின் சகோதரர் தீபக்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
9 years love murdered 90 days shocking incident where victim hanged muffler to make suicide