சாமானியரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்...! - அண்ணா நினைவுநாளில் ஆதவ் அர்ஜுனா அழைப்பு - Seithipunal
Seithipunal


பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அண்ணாவின் அரசியல் பாரம்பரியத்தையும் ஜனநாயகப் பண்புகளையும் வலியுறுத்தியுள்ளார்.

“மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்” என்ற உயர்ந்த ஜனநாயகக் கொள்கையை நடைமுறையில் கொண்டு வந்து காட்டிய தலைவர்தான் அண்ணா. கொள்கை சார்ந்த அரசியலையும், மக்களின் வாழ்வை நேரடியாகத் தொடும் தீர்வுகளையும் இணைத்து செயல்பட்டவர்.

மாநிலக் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முடியும், சாதாரண மனிதனும் அதிகாரத்தின் உச்சியை அடைய முடியும் என்பதைக் கண்முன்னே நிரூபித்த ஜனநாயகப் புரட்சியாளர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னோடி தலைவர், மாநில சுயாட்சியின் உறுதியான குரல், மக்கள்நல அரசியலின் முகவரி, தேர்தல் ஜனநாயகத்தின் வழிகாட்டி என பல அடையாளங்களைப் பெற்ற பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில், அவரது சேவையை மரியாதையுடன் நினைவுகூருவோம்.

அவர் காட்டிய பாதையில், மீண்டும் மக்களாட்சியை மக்களுக்காக நிலைநிறுத்தி, சாதாரண மக்களின் ஆட்சியை மக்கள் ஆதரவுடன் வென்றெடுப்போம் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We bring back rule common man Aadav Arjuna call Anna death anniversary


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->