அம்மா ஆட்சி மீண்டும் வரும் எதிரிகள் வீழ்வார்கள் அண்ணா நினைவிடத்தில் சசிகலா அதிரடி உறுதி - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று மரியாதை செலுத்தினார். அப்போது திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள், “எதிரிகளையும் துரோகிகளையும் தோற்கடித்து, சசிகலா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்” என்று உறுதிமொழி எடுத்தனர்.அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்கள்,

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்கப் போகிறீர்களா என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிகலா, “எதிரிகளும் துரோகிகளும் யார் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதை நான் தனியாக விளக்கத் தேவையில்லை. வரும் தேர்தலில் என் தலைமையில் நிச்சயமாக ‘அம்மா ஆட்சி’ மீண்டும் அமையும். அது எப்படி நடைபெறும் என்பதை விரைவில் நீங்கள் காண்பீர்கள்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என நடிகர் விஜய் விமர்சித்திருப்பது குறித்து கேட்டபோது, “அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடு என்ன என்பதையும், அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்பதையும் தமிழக மக்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

அதனால் தான் ‘அம்மா ஆட்சி’ மீண்டும் வர வேண்டும் என்ற விருப்பம் மக்களிடையே உள்ளது” என பதிலடி கொடுத்தார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய கேள்விக்கு, “ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி அரசியல் முடிவுகள் இருக்கும். அவர்கள் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து நான் கருத்து சொல்லுவது சரியாக இருக்காது” என்று சசிகலா விளக்கமளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amma rule return enemies fall Sasikala sensational pledge Anna memorial


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->