நடுரோட்டில் மடக்கிய தனிப்படை...! தூத்துக்குடியில் ரூ.5 லட்சத்து வாசனை ஷாம்பு கடத்திய ஆட்டோ பறிமுதல்...! பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனிகோநகர் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இணைந்து நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது இனிகோநகர் கடற்கரையின் தெற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு ஆட்டோவை காவலர்கள் சோதனை செய்தனர்.

விசாரணையில், இன்று அதிகாலை படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக 8 மூட்டைகள் மற்றும் 51 அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 48,960 வாசனை ஷாம்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாசனை ஷாம்புகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.மேலும், சம்பவ இடத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரான தூத்துக்குடி தாளமுத்துநகர், வெள்ளைப்பட்டி, அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் மரிய நிசாந்தன் (32) கைது செய்யப்பட்டார்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த கடத்தல் முயற்சியின் பின்னணியில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள் உள்ளனர் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

special force stopped middle road auto carrying 5 lakh worth perfumed shampoo seized Thoothukudi What background


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->