தமிழக சட்டப்பேரவையில் புதிய சரித்திரம்...! அனைத்துக் கட்சிகளுக்கும் சமபங்கு...! - சபாநாயகர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும் 2 பெண் சிங்கங்கள்...! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவை நடவடிக்கைகள் சீராகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதற்கு சபாநாயகர் முக்கிய பொறுப்பை வகிக்கிறார். சபாநாயகர் அவையில் இல்லாத நேரங்களில் துணை சபாநாயகர் அவை நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கிறார். இருவரும் இல்லாத சூழலில், மாற்றுத் தலைவர்கள் அவை நிகழ்வுகளை வழிநடத்துவது நடைமுறையாக இருந்து வருகிறது.

அந்த வகையில், 17-வது தமிழக சட்டப்பேரவைக்கான மாற்றுத் தலைவர்களின் பட்டியலை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி, மதார் பதுருதீன் (த.வெ.க.),தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.), விஜய் சரவணன் (த.வெ.க.), சத்யபாமா (த.வெ.க.), காதர் பாட்சா முத்துராமலிங்கம் (தி.மு.க.), தாரகை கத்பட் (காங்கிரஸ்) ஆகியோர் மாற்றுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே மாற்றுத் தலைவர்களாக தேர்வு செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை அரசியல் சமநிலையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, த.வெ.க.வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் மாற்றுத் தலைவர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும், நியமிக்கப்பட்டுள்ள 6 மாற்றுத் தலைவர்களில் 2 பேர் பெண்கள் என்பது சட்டப்பேரவை வரலாற்றில் கவனம் ஈர்க்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New history Tamil Nadu Legislative Assembly Equal participation parties 2 female lions adorn Speaker chair


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->