நாட்டை உலுக்கியுள்ள ஆந்திரா ஆம்னி பேருந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு காரணம் பஸ்ஸில் இருந்த 234 ஸ்மார்ட்போன்கள்..? தடயவியல் நிபுணர்கள் அதிர்ச்சி..!
Did the Andhra Pradesh Omni bus accident happen because 234 smartphones on the bus exploded
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் அருகே இருசக்கர வாகனம் மோதி தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதோடு, சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்த ஆம்னி பேருந்து விபத்துக்கு 234 ஸ்மார்ட்போன்கள் வெடித்ததே முக்கிய காரணம் என தடயவியல் நிபுணர்கள் கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில் தடயவியல் நிபுணர்கள் விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்திற்குள்ளான ஆம்னி பேருந்தில் 234 ஸ்மார்ட்போன்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. சுமார் 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த 234 செல்போன்களை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பெங்களூருக்கு பார்சலாக அனுப்பி இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் பேருந்து தீப்பற்றிய போது, இந்த செல்போன்களில் இருந்த பேட்டரிகள் ஒரே நேரத்தில் வெடித்ததே பெரும் விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில்பேருந்தில் இருந்த ஏசியின் பேட்டரியும் வெடித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து விபத்திற்குள்ளான போது செல்போன்கள் வெடித்த சத்தம் கேட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பஸ்சில் திடீரென தீ பற்றியது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி- ராஞ்சியில் இருந்து சத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த பஸ் லோஹர்தகா நெடுஞ்சாலையில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்த போது திடீரென பஸ்சில் தீ பற்றியது. இந்த விபத்தில் பயணிகள் 40க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Did the Andhra Pradesh Omni bus accident happen because 234 smartphones on the bus exploded