'டெல்லியில் சந்தித்த அனுபவங்களால் அதிர்ச்சியும், நரக வேதனை அனுபவித்தேன்'; பிரபல நடிகை பகீர் பேட்டி..!
Actress Dolly Singh says she was shocked and suffered hellish pain due to her experiences in Delhi
சமூக வலைதளத்தில் பிரபலமாகி நடிகையான டோலி சிங், டெல்லியில் தான் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வருகிறார்.
இதற்கு முன்னதாக, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, ஒரு காஸ்டிங் இயக்குனர் தன்னை நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் பரபரப்பு கிளப்பினார். அத்துடன், மற்றொரு சம்பவத்தில், பைக்கில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் அத்துமீறியபோது, பயந்து ஓடாமல், அவரை முடியைப் பிடித்து இழுத்து அவருடன் சண்டையிட்டு காவல்துறையில் புகார் அளித்ததாகவும் வெளிப்படையாக கூறியிருந்தார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், 'இந்தச் சம்பவங்கள் தனக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும், சுயமாக வெற்றி பெற வேண்டும்' என்ற தனது உறுதியை வலுப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், அவர் டெல்லியில் வளர்ந்த போது தான் அனுபவித்த கொடுமையான நாட்களை மீண்டும் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில்: 'நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நான் சென்ற பேருந்து அரசுப் பள்ளி வழியாகச் சென்றது. பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்கள் அந்த பேருந்தில் ஏறுவார்கள். அப்போது, அவர்கள் பெண்கள் மீது கற்களை வீசுவது, ஆபாசமாகப் பேசுவது என தொடர்ந்து துன்புறுத்துவார்கள். டெல்லியில் ஒரு இளம் பெண்ணாக என் வாழ்க்கையானது பயம் மற்றும் எச்சரிக்கை உணர்வுடனேயே கழிந்தது. மலைப்பகுதியில் பாதுகாப்பான சூழலில் வளர்ந்த நான், டெல்லியில் சந்தித்த அனுபவங்கள் பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியது' என்று குறிப்பிட்டுள்ளார்.

English Summary
Actress Dolly Singh says she was shocked and suffered hellish pain due to her experiences in Delhi