41வது பட பூஜையில் துல்கர் சல்மானுக்கு கிளாப் அடித்த நானி...!
Nani clapped for Dulquer Salmaan 41st film pooja
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளின் திரைத்துறையில் முன்னணி நடிகராக தற்போது வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் ''துல்கர் சல்மான்''.

மேலும், மலையாள முன்னணி நடிகர் மம்முட்டியின் மகனான இவர், கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'செக்கண்டு சோவ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து "தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும்" உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான "சீதா ராமம்", 'லக்கி பாஸ்கர்' படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன.
இவர் தற்போது செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் 'காந்தா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் 41-வது படப்பிடிப்பை நடிகர் நானி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.இப்படத்தை ரவி நெலாகுடிடி இயக்குகிறார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரபல நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Nani clapped for Dulquer Salmaan 41st film pooja