ஆணவக் கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளி வருவதில்லை...! - நீதிபதி - Seithipunal
Seithipunal


 சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் கல்லூரி மாணவர் ஜெய சூர்யாவின் தந்தை எம்.முருகன் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில்,விபத்தில் உயிரிழந்ததாக தன்  மகனின் மரணத்தை திசைதிருப்புகிறார்கள்.

இது கண்டிப்பாக ஆணவக் கொலை தான். என் மகன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், உடன்படித்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவியை காதலித்ததால், அவரின் உறவினர்கள் அடிக்கடி மிரட்டியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்று இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு அமர்வுக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது. ஆணவக் கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடலூர் கல்லூரி மாணவர் மரணத்தில் ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Even though honor killings are increasing truth not coming out Judge


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->