நான் ஓகே சொன்ன படம் இது இல்லை - அம்பிகாபதி குறித்து தனுஷ் கருத்து.!!
actor dhanush speech about ambikapathy climax change
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அம்பிகாபதி. இந்தப் படம் தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். இந்த நிலையில் அம்பிகாபதி திரைப்படம் வெளியாகி சுமார் 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர்.
அந்தக் கிளைமேக்சில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது. இது படத்தின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து அப்படித்தான் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தெரிவித்துள்ளதாவது:- "தன்னுடைய கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி படத்தயாரிப்பு நிறுவனம் ரீரிலீஸ் செய்துள்ளது. இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்ததற்கு நடிகர் தனுஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "ஏஐ மூலம் மாற்றியமைக்கப்பட கிளைமேக்ஸ் உடன் வந்துள்ள அம்பிகாபதி படம், என்னை முழுமையாக தொந்தரவு செய்துவிட்டது. என் கருத்தை மீறி இதை வெளியிட்டுள்ளனர். 12 வருடங்களுக்கு முன் நான் ஓகே சொன்ன படம் இது இல்லை.
ஏஐ மூலம் செய்யப்படும் இவ்வகை மாற்றங்கள், சினிமாவை அச்சுறுத்துகிறது. வருங்காலத்தில் இவ்விஷயத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை" என்று தெரிவித்தார்.
English Summary
actor dhanush speech about ambikapathy climax change