பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு..தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!
The petition filed by porkodi Armstrong The High Court orders the Tamil Nadu government to respond
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ,தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி மாலை வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்,கொலை செய்யப்பட்டார். இந்தசம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதையடுத்து போலீசாரின் என்கவுண்டர் என ரவுடிகளை ஒடுக்க தீவிரம் காட்டி வந்தனர். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மனுத்தாக்கல் செய்து உள்ளார்.அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் , ஆளுங்கட்சி தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரணை கேட்ட இந்த மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து அக்.20-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
English Summary
The petition filed by porkodi Armstrong The High Court orders the Tamil Nadu government to respond