காஷ்மீர் எல்லையில் கம்பி வேலிக்குள் கதறும் தமிழக சிஆர்பிஎப்., பெண் காவலர்: அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ள அண்ணாமலை..! நடந்தது என்ன..?
Annamalai releases shocking video of Tamil Nadu CRPF female constable crying on Kashmir border
குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் திமுகவின் ஆட்சி மாதிரி, நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள் என்று பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீரில் நமது நாட்டின் எல்லைகளில் மரியாதையுடன் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிஆர்பிஎஃப் ஜவான், இந்த ஆண்டு ஜூன் மாதம் காட்பாடி அருகே தனது வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் காவல்துறையின் நடவடிக்கையின்மை குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
சீருடையில் இருக்கும் ஒரு பெண்ணை தோளில் தேசக் கொடியை ஏந்தியபடி ஆன்லைனில் நீதிக்காக கெஞ்ச வைக்கும் அளவுக்கு எந்த வகையான நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது?
இது வெறும் சட்டமீறல் மட்டுமல்ல, குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் திமுகவின் ஆட்சி மாதிரி, நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள். எழுந்திருங்கள் திரு. மு.க.ஸ்டாலின் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், தன் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை யாரோ ஒருவர் வீடு புகுந்து திருடிச்சென்று விட்டதாக, சிஆர்பிஎப்., பெண் காவலர் கதறி அழுதபடி கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தன் தாயார் மாடு மேய்க்கச்சென்ற போது, இந்த சம்பவம் நடந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சிஆர்பிஎப்., வீரர் நாட்டை பாதுக்காக்க கம்பி வேலி போடப்பட்ட ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருக்கிறார். ஆனால், அவரது நகைகளை காப்பாற்றி கொள்ள முடியவில்லை.
English Summary
Annamalai releases shocking video of Tamil Nadu CRPF female constable crying on Kashmir border