நகசுற்று வராமல் தடுக்கும் சில வழிமுறைகள்...!இதோ...!
Here are some ways to prevent ingrown toenails
நம் விரல்களில்,நகச்சுற்று வராமல் தடுக்கும் முறைகள் நாம் பலவற்றை கண்டிருப்போம். ஆனால்,அதில் குறிப்பிட்ட சில வழிமுறைகளை கடைபிடித்தால் நாம் எளிதில் அவற்றை நீக்கி விடலாம்.
நகச்சுற்று வராமல் தடுக்கும் முறைகள் :
நகத்திற்கு அருகாமையில் உள்ள மென்மையான இடங்கள் காயப்படாது வைத்திருப்பதே நகச்சுற்றைத் தவிர்க்க ஒரே வழியாகும்.நகத்தையும் அதைச் சுற்றியுள்ள சருமத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

நகங்கள் வளரும்போது இடுக்குகளில் அழுக்குகள் தேங்க வாய்ப்பிருக்கிறது. நகம் வெட்டும் போது அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாதவாறு கவனமாக வெட்ட வேண்டும். குளித்த பின் நகங்கள் மென்மையாக இருக்கும்போது வெட்டுவதால் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாது.
பாக்டீரியா, பூஞ்சைகள் தேங்காத வண்ணம் அடிக்கடி கை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.நல்ல கூரான நகவெட்டியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.கை நகங்களின் முனைப்பகுதி சற்று வளைவாகவும், கால் நகங்களானது நேராகவும் இருக்குமாறு வெட்ட வேண்டும்.நகங்களை ஒட்ட வெட்டுவது தவறு.நகம் கடிப்பதை தவிர்க்க வேண்டும்.
English Summary
Here are some ways to prevent ingrown toenails