தமிழக மீனவர்கள் கைதாவதைத் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணி.!!
coast guard patrols in sea for stop tamilnadu fishermans arrest
மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 41 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களது 9 படகுகளை பறிமுதல் செய்துள்ளது.
தொடர்ந்து மீன்வர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையின் இந்தக் கைது நடவடிக்கையால் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகிலுள்ள கடல் பகுதிகளில் கூட மீன்பிடிக்க செல்லாமல் தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் மீனவர்கள் எல்லை தாண்டி சென்று கைதாவதை தடுக்கும் விதமாக மண்டபம் மற்றும் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான இரண்டு ரோந்து கப்பல்கள் தனுஷ்கோடி முதல் ராமேசுவரம், மண்டபம் வரையிலான இந்திய கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றன.
English Summary
coast guard patrols in sea for stop tamilnadu fishermans arrest