கல்லூரி மாணவர்களுக்கு‌ இடையேயானப் கலைவிழா போட்டி..ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ,மாணவிகள்!  - Seithipunal
Seithipunal


சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான சேது ஃபியஸ்டா 25' கலைவிழா நடைபெற்றது .
 
காரைக்குடி அருகே விசாலையன்கோட்டை, சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2025 ஆண்டுக்கான கல்லூரி மாணவர்களுக்கு‌ இடையேயானப் போட்டி-'சேது ஃபியஸ்டா 25'  நாளன்று கல்லூரியின் தாளாளர் முனைவர் சேது குமணன் வழிக்காட்டுதலில் அக்கல்லூரி‌ மாணவர்களுக்கு இடையிலான போட்டிகளில் நான்கு அணிகளும் ஆர்வமாக பங்கேற்றனர். 

இந்நிகழ்வில் தமிழ் கவிதைப் போட்டி, ஆங்கில கவிதைப் போட்டி, தமிழ் திருப்புமுனை, முக ஓவியம், பென்சில் ஓவியம் வரைதல், தமிழோடு விளையாடு, பின்னணி இசை கண்டுப்பிடித்தல், டம் சராட்ஸ், வினாடி வினா, புதையல் வேட்டை மற்றும் பல‌  போட்டிகள்  நடத்தப்பட்டன. முதல்வர் பேரா.முனைவர் முரளிக் கிருஷ்ணசாமி      தலைமையுரையாற்றினார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக முனைவர் ஜெ. சதீஷ் குமார்,  வேல் டெக் இரங்கராஜன், டாக்டர் சகுந்தலா‌ ஆர்&டி, சென்னை  சிறப்பு நடனம் புரிந்தார். சிறப்பு விருந்தினர்கள் ஆர். ஜெயக்குமார், ஜீ தமிழ் காமடிக் கில்லாடி வெற்றியாளர் மற்றும் எஸ். என். சபரிநாதன், ப்ளாக் ஷீப் டிவி காமடிக் கஜானா வெற்றியாளர் சிறப்பு நிகழ்ச்சி நடத்தினார்.   சென்னை சோகா இகெதா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வரான முனைவர் கண்மணி சுப்பிரமணியன்   கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் மா.விஷ்ணுப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக கலைப் போட்டிகளில்  மாணவர்கள் மிக ஆர்வமாக பங்கேற்று வெற்றிப் பெற்றனர்.  நடந்த போட்டிகளில் அதிக போட்டிகளில் பரிசு பெற்று ஒட்டுமொத்த வெற்றியாளருக்கானக் கோப்பையைக் பைரோக்ரூக் குழுவினர் தட்டிச் சென்றனர். ஆசிரியர் ஆலோசகர் பேரா.முனைவர் அ. கவியரசு மற்றும் தாவர நோயியல் துறையின் உதவி பேராசிரியர்  செ.கி. அக்க்ஷயா , மாணவர் மன்றத் தலைவர் செ. பிரதீப், மாணவர் மன்றத் தலைவி செல்வி. சே. ஷர்மிஸ்தா நாடக மன்றத் தலைவர் செல்வன் சு. கார்த்திக் ராஜா, விளையாட்டுத் துறை தலைவி பிரியங்கா விழாவிற்க்கான ஏற்பாடுகளை சிறப்பாக ஒருங்கினைத்தனர்.

 இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள், மானவ மன்றத் தலைவர்கள்  அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாகவும் விமர்சையாகவும் நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Intercollege cultural festival competition for college students Students participated with enthusiasm!


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->