நெல்லையில் பரபரப்பு..! இபிஸ்-க்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது கல்வீசி தாக்குதல்: போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு..!
Stone-pelting attack on those who showed black flags against Ibis in Nellai
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நெல்லை சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி காட்ட போராட்டம் நடத்தப்பட்டது. அவ்வாறு போராட்டம் நடத்தியவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பியவர்கள் மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த தேவர் சிலை முன் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் இபிஎஸ்-க்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டது. இவ்வாறு நெல்லையில் கருப்பு கொடி காட்டியவர்களை அதிமுக ஆதரவு அமைப்பினர் கல் வீசிய தாக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்டன முழக்கங்கள் எழுப்பியவர்களுக்கும் அதிமுக ஆதரவு அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது அதிமுக ஆதரவு அமைப்பையும், கருப்புக் கொடி காட்டியவர்களையும் போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பையும் போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது தள்ளு முள்ளும் ஏற்பட்டுள்ளது.
English Summary
Stone-pelting attack on those who showed black flags against Ibis in Nellai