இந்தியாவுக்கு மேலும் அதிக வரி உயர்வு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து எச்சரிக்கை..!
US President Trump warns of further tariff hikes for India
இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், மீண்டும் அதிக வரியை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். இந்தப் புதிய வரி வரும் 07-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
ஏற்கனவே 25% வரி விதித்துள்ள நிலையில் வரியை மேலும் உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுடன் அதை சந்தையில் விற்று லாபம் ஈட்டுகிறது. அத்துடன், ரஷ்ய தாக்குதலில் உக்ரேனியர்கள் உயிரிழப்பதை கண்டு இந்தியாவுக்கு எந்த கவலை இல்லை. அதனால் இந்தியாவுக்கு மேலும் கூடுதல் வரியை விதிக்கவுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
English Summary
US President Trump warns of further tariff hikes for India