வீர மதுரையின் வீரன் வர போறாரு...! மதுரை அழகர்கோயிலில் ஆடித் தேரோட்டம்: முழுவீச்சில் தயாராகும் தேர் மற்றும் இதர பணிகள்..! - Seithipunal
Seithipunal


மதுரை அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த ஆகஸ்ட் 01-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 09-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்த தேரோட்டத்தினை முன்னிட்டு, அங்கு தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 04-ஆம் நாளான இன்று கருட வாகனத்தில் அழகர் எழுந்தருளி காட்சியளித்தார். இதன் போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த ஆடி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மற்றும் பதினெட்டாம்படி கதவுகள் திறப்பு நிகழ்வு ஆகஸ்ட் 09-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 08.40 மணிக்கு  திருத்தேரோட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து மாலை 06 மணிக்கு மேல் பதினெட்டாம்படி கதவுகள் திறக்கப்பட்டடு படிபூஜைகள் நடைபெற்று சந்தனம் சாற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 09-ஆம் தேதி தேரோட்டத்திற்கான வேலைகள் நடைபெற்றுவருவதோடு, தேரும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.  அதிலும் தேரின் தேர் சக்கரங்கள் சரிபார்த்தல், தேரில் கட்டைகள் அடுக்குதல், வடக்கயிறு பொருத்துதல், வர்ண கொடை பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆடி திருவிழாவையொட்டி மதுரை அழகர் கோயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக்கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chariots and other works in full swing for the Aadi Therotam at Madurai Alagar Temple


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->