பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள், பாகிஸ்தானியர்கள் என உறுதி: சிக்கிய பாகிஸ்தான் வாக்காளர் அட்டை, கைரேகை பதிவுகள் மற்றும் சாக்லேட் உறை ஆதாரங்கள்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கேஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டி உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, குறித்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தானிய தீவிரவாதிககளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

அப்போது, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் மூலம் அவர்களது பாகிஸ்தான் தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பான விசாரணையில், தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 7.62 அண்ட் 39 மி.மீ. ரக துப்பாக்கி குண்டு உறைகளின் தடயங்கள், கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று ஏ.கே-103 ரக துப்பாக்கிகளுடன் பொருந்தியது.

அத்துடன், பஹல்காமில் கிடைத்த கிழிந்த சட்டை ஒன்றில் இருந்த ரத்தத்தின் மரபணு மாதிரிகள், தச்சிகாமில் கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளின் மரபணுவுடன் முழுமையாக ஒத்துப் போயுள்ளது. உளவுத்துறையின் தகவல்படி, இந்த மூவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் குரேஸ் பகுதி வழியாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உணவு வழங்கியதாக உள்ளூர்வாசிகள் இருவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரவாதிகளின் தலைவனான சுலைமான் ஷாவின் கைக்கடிகாரத்தில் இருந்து மீட்கப்பட்ட இருப்பிடக் குறிப்புகள், தாக்குதல் நடந்த இடத்துடன் சரியாகப் பொருந்திப் போயுள்ளது.

சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 28-ஆம் தேதி ‘மகாதேவ் ஆபரேஷன்’ என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சுலைமான் ஷா, அபு ஹம்சா, யாசிர் என்கிற ஜிப்ரான் ஆகிய மூன்று லஷ்கர் தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

படையினரால் கொல்லப்பட்ட சுலைமான் ஷா மற்றும் அபு ஹம்சா ஆகியோரின் உடல்களில் இருந்து, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்ட்டுள்ளன. அவற்றின் வரிசை எண்கள் லாகூர் மற்றும் குஜ்ரன்வாலா நாடாளுமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சேதமடைந்த செயற்கைக்கோள் தொலைபேசியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு நுண் நினைவக அட்டையில், பாகிஸ்தானின் தேசிய குடிமக்கள் பதிவேடான நாட்ராவின் தரவுகள் இருந்துள்ளன.  அதில் மூவரின் கைரேகைகள், முக அமைப்பு மற்றும் குடும்ப வரைபடம் உள்ளிட்ட உயிரியளவியல் பதிவுகள் இருந்துள்ளது.  இதன்காரணமாக தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தான் குடிமக்கள் என்பது உறுதியாகியுள்ளது.

அத்துடன், அவர்களிடம் கராச்சியில் தயாரிக்கப்படும் ‘கேண்டிலேண்ட்’ மற்றும் ‘சோக்கோமேக்ஸ்’ சாக்லேட் உறைகளும் உடமைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட்டுள்ளமை அவர்களின் பாகிஸ்தானிய தொடர்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pahalgam attack perpetrators confirmed to be Pakistanis using Pakistani voter ID and chocolate envelope evidence


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->