திருப்பத்தூர் பள்ளி மாணவன் உயிரிழப்பு - ரெயில் முன் அமர்ந்து உறவினர்கள் சாலை மறியல்.!!
peoples protest front of train in thirupathur school student died issue
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மாணவன் கடந்த 1-ம் தேதி முதல் வகுப்புக்கும் செல்லாமல், வீட்டிற்கும் செல்லாமல் இருந்ததால் பதற்றமடைந்த பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு நாட்களாக சிறுவனை தேடி வந்தனர். இதற்கிடையே, அதே பள்ளியில் உள்ள கிணற்றில் மாணவனின் சடலம் மிதப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது அது காணாமல் போன மாணவன் முகிலன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி பாதிரியார் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் எனக்கோரி உறவினர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் திருப்பத்தூரில் ரெயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் மாணவரின் உறவினர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
peoples protest front of train in thirupathur school student died issue