''துரோகத்தின் சாயல் படிந்தவர், முதலமைச்சராக்கிய சசிகலாவையே யார் என்று கேட்டவர், துரோகத்தைப் பற்றி பேசக்கூடாது'': இபிஸை தாக்கிய சேகர்பாபு..!
Sekarbabu criticizes Edappadi Palaniswami for asking who Sasikala is and says he should not talk about his betrayal
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 01 இல் கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை காலமும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 'மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை சென்னை புளியந்தோப்பு, சூளையில் நடைபெற்ற 'அன்னம் தரும் அமுதக் கரங்கள்' நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழன் பிரசன்னா, பகுதி செயலாளர் சோ.வேலு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:
ஓ:பன்னீர்செல்வம் ஸ்டாலினை சந்தித்த விவகாரத்தில், எதிர்க்கட்சியினர் முதலமைச்சரை சந்திப்பது துரோகத்தின் வெளிப்பாடு என்று எடப்பாடி கூறியுள்ளாரே..? ஆனால், எடப்பாடி அமித்ஷாவை சந்தித்ததை எப்படி எடுத்துக் கொள்ளலாம்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், மோடியை நான்கு கார்களில் மாறி மாறி சென்று சந்தித்ததை எப்படி எடுத்துக் கொள்ளலாம்..? முதல்வரின் சிறிய உடல்நலக்குறைவின் காரணமாக இல்லத்தில் வந்து சந்தித்ததை எப்படி துரோகம் என்று சொல்ல முடியும்..? என்றும் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், மனிதநேயம் உள்ள மனிதாபிமானம் உள்ள யாரும் இதனை துரோகம் என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், துரோகத்தின் சாயல் படிந்தவர், தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே யார் என்று கேட்டவர், துரோகத்தைப் பற்றி பேசக்கூடாது என்று கடுமையாக எடப்பாடி பழனிசாமியை விமர்ச்சித்துள்ளார்.
English Summary
Sekarbabu criticizes Edappadi Palaniswami for asking who Sasikala is and says he should not talk about his betrayal