காவல்துறையினரின் அலட்சியம் வேதனை அளிக்கிறது - எம்.பி சுதா பரபரப்பு பேட்டி.!!
congrass mp sudha press meet about chain seized issue
காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை எம்.பி சுதா இன்று காலை டெல்லியில் நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர் அவரிடம் இருந்து தங்க செயினை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எம்.பி சுதா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது தெரிவித்ததாவது: -
"தலைநகர் டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக்கூடிய தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் காலை நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் வந்து, என்னிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக எந்த பதட்டமும் இல்லாமல் சென்றார்.
இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த பகுதியில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியிலோ அல்லது ரோந்து பணியிலோ இல்லை. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பணியில் வந்த போலீசாரிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக தெரிவித்தோம். ஆனால் அவர் நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று மட்டுமே தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு பாதுகாப்பான தூதரகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் இதுபோன்ற ஒரு செயின் பறிப்பு சம்பவம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றிருக்கிறது என்றால், இந்த நாட்டில் பிற பெண்கள் இதுபோன்று செல்லும்போது அவர்களுக்கு எதிரான கொடுமை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது,
காவல்துறையினரும் அலட்சிய போக்கு உடனே நடந்து கொண்டனர் என்பது வேதனைக்குரியது. இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் இடம் புகார் அளித்துள்ளோம். மேலும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலைநகர் டெல்லியில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் இருந்த போதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
congrass mp sudha press meet about chain seized issue