மதம் மாற மறுப்பு..காதலியை கொன்ற காதலன்!  - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய மதத்துக்கு மாற மறுத்ததால் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனை அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரவனரா என்ற பகுதியில் வசித்து வரும் ஷேக்ரையீஸ் என்பவர் அதே பகுதியில் வசித்து வந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.  . 42 வயதாகும் ஷேக்ரையீஸ் 35வயதான அந்த பெண் ஒருதலை  காதலை  ஏற்கவில்லை.

அதுமட்டுமல்லாமல்  அடிக்கடி பாக்கியஸ்ரீயிடம் ஷேக்ரையீஸ் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொல்லை கொடுத்ததோடு  இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பாக்கியஸ்ரீ மறுப்பு தெரிவித்து ஷேக்ரையீசை தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில், இதனால் கடும் கோபத்தில் இருந்த ஷேக்ரையீஸ் நேற்று இரவு பாக்கியஸ்ரீ வீட்டுக்குள் புகுந்து அவரிடம் மீண்டும் மத மாற வலியுறுத்தி மீண்டும் சண்டை போட்டு  பாக்கியஸ்ரீ ஏற்காததால் அவரது தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளார். ஒருகட்டத்தில் ரையீஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியஸ்ரீயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாக்கியஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பாக்கியஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஷேக்ரையீசை வலைவீசி தேடி வந்த நிலையில், அதே பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Refusal to change religion The lover who killed his beloved


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->