புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
Greetings to Chief Minister Mr Rangasamy of Puducherry from Prime Minister Modi on his birthday
புதுவை முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் பாஜக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது .இந்தக் கூட்டணி ஆட்சி ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார், அவருக்கு இன்று பிறந்தநாள் .இதை முன்னிட்டு NR காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர், அது மட்டும் இல்லாமல் தொகுதி வாரியாக நிர்வாகிகள் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இதே போல் பல்வேறு கோவில்களிலும் தேர் வழிபாடு நிகழ்ச்சியும் செய்தனர்.இந்தநிலையில் முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இதேபோல புதுவை துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் அவர்களும் முதலமைச்சரங்கசாமி நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இதேபோல உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முதலமைச்சரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார், முன்னதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் .

அதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் ,மந்திரிகள், NR காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ,மாநில என் ஆர் காங்கிரஸின்தொண்டர்கள் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர், முதலமைச்சரங்கசாமி பிறந்தநாள் முன்னிட்டு அப்பா பைத்தியசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் அனைவருக்கும்அன்னதானம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் ,ஆங்காங்கே தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன் முதலமைச்சருக்கு பேனர்கள் போஸ்டர்கள் அடித்து புதுவையை விழாக்கோலம் விழாக்களும் ஒன்று உள்ளது என்பதை மறக்க இயலாது.
English Summary
Greetings to Chief Minister Mr Rangasamy of Puducherry from Prime Minister Modi on his birthday