வந்து விழுந்த கேள்வி.. அண்ணாமலை சொன்ன பதில்.!! ரியாக்ட் ஆன எல்.முருகன்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு இருந்த என் மண் என் மக்கள் பாதையாத்திரையின் இறுதி பயணம் இன்று திருப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தொடங்கி நடைபெற்ற வருகிறது இந்த நடைபயணத்தின் இடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் நேற்று கோவையில் நடைபெறுவதாக இருந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் பாஜகவில் இணையும் விழா ரத்து செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "இன்றைய முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளனர். பல முக்கிய பிள்ளைகள் நாங்கள் கூறும் இடத்தில் இணைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு டெல்லியில் இணைய வேண்டும் என ஆசை. எங்கள் கட்சியிலும் பெரிய புள்ளிகள் இருக்கின்றனர். அவர்களையும் நாங்கள் சமாதானம் படுத்த வேண்டும். 

பாஜகவில் இணைவதாக வருபவர்கள் தேர்தலில் நிற்கும் வல்லமை கொண்டவர்களாக இருக்கின்றனர் இதன் காரணமாக பாஜகவில் இருப்பவர்களையும் நாங்கள் சமாதானம் செய்ய வேண்டும். பாஜகவில் இணைபவர்களை மரியாதையோடு கொண்டு வர வேண்டும்.

அதனால் பொறுத்திருங்கள் மிகப்பெரிய ஆட்கள் பாஜகவில் இணையதான் போகிறார்கள். இது வெறும் ஆரம்பம் தான் என பதில் அளித்தபோது பாஜகவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைய போவதாக கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை யார் இணைகிறார்கள் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் பாஜகவை மதிக்கவே மாட்டேன் என சொன்னவர்கள் காலையில் எழுந்தது முதல் இரவு வரை பாஜகவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். பாஜகவை பொறுத்த வரை நாங்கள் யாரையும் வாங்கல் என அழைப்பதில்லை. வருபவர்கள் தானாக வருகின்றனர் ஆனால் பெரிய புள்ளிகள் வரும் பொழுது கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேலை" என் அண்ணாமலை பேசியிட்டுக் கொண்டிருக்கும்போதே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அண்ணாமலையை செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து அழைத்துச் சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai response to aiadmk Amman Arjunan statement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->