வசமாக சிக்கப்போகும் அதிமுக புள்ளிகள்... சற்றுமுன் 3 தனிப்படை அமைத்து உத்தரவு.!
AIADMK OPS EPS TNPolice
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் கடுமையான முறையில் மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் கல் வீசி தாக்கிக் கொண்டதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயம் அடைந்த தங்களது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
மோதல் சம்பவத்தை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து, மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.